திருச்சி எ.புதூரில் காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பம். உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர், (40வது வார்டு) நல்ல தண்ணீர் கேணி தெரு, தங்க ராஜா தியேட்டர் எதிர்புறம் உள்ள மின் கம்பம் (TCC.No 40/4/53) அடி பாகம் முழுவதும் செல்லரித்து இப்போ அப்போ சரிந்து விழும் நிலையில் உள்ளது.
பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் உள்ள இந்த மின்கம்பத்தை மாநகராட்சி நிர்வாகம் உயிர்பலி ஏற்படும் முன் மாற்றப்பட வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் விருப்பமாகும்.