தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டி திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்றும், பட்டியல் இனத்தில் இருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் தேவேந்திரகுல வேளாளர் சங்க தலைவர் பாச . ராஜேந்திரன் தலைமையில் நடந்தது கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் சங்கர் ,அய்யப்பன் ஆகியோர் பேசியதாவது தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை மத்திய அரசுகளின் வெளியிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்கள் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர் ,மக்கள் மறுமலர்ச்சி கழகத் தலைவர் முருகேசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மேடையில் பேசினார்கள் கொட்டப்பட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கொட்டப்பட்டு ரமேஷ் மற்றும் கொட்டப்பட்டு பாஸ்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் சங்கக் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தை ஓட்டி கலெக்டர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மேலும் சங்க நிர்வாகிகள் பேசியதாவது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள்