திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், “ஒன்றிணைக்கும், கிறிஸ்துமஸ் பெருவிழா” திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் நடைபெற்ற கலைகாவிரி நடனம் காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் வரவேற்பு நடனமாக ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவில் அனைத்து சமுதாய தலைவர்களான
அருட்பணி யூஜின், அருட்பணி ஜெயராஜ், திருச்சி மாவட்ட ஹாஜி க.ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயி, பிரம்மகுமாரிகள் சுந்தர்ராஜன், டேவிட், அருட்பணியாளர்கள் அல்போன்ஸ், மைக்கிள் ஜோ, ஆண்டனி ரமேஷ், மரிவளன், ஜோசப், பாஸ்டர்கள் ஆரோன், ரமேஷ் மற்றும் லாரன்ஸ், அருட்சகோதரி அடைக்கல வெர்ஜின், மாநில துணை தலைவர் சபாரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி சென்னையில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் ஜோசப் லூயிஸ், இன்ஜினியர்
பேட்ரிக் ராஜ்குமார், சிறுகதை எழுத்தாளர்
கேத்ரின் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் விழாவின் ஒருங்கிணப்பாளர்களாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேசன், மத்திய மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த தலைவர் ஜேக்கப், தொகுதி செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஞானப்பிரகாசம், இளைஞரணி ஜான் பிரகாஷ், செய்தித் தொடர்பாளர் தன்ராஜ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ்,மத்திய மாவட்ட தலைவர் அண்ட் ரோஸ், தொகுதி செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் அந்தோணி, மகளிர் அணியைச் சேர்ந்த லாரா, தொகுதி மகளிரணி செயலாளர் வாசிக மாலா, மத்திய மாவட்டத்தை சேர்ந்த யுவராணி, இளைஞரணி பிரேம், செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உட்பட
மாநில, மாவட்ட, தொகுதி, வட்ட, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.