தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் தயாரித்து கிராம முதலீட்டு திட்டம் ஒப்புதல் பெறுதலுக்கான ஊர்க்கூட்டம் இனாம் குளத்தூர் சமுதாய கூடத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு வெள்ளையம்மாள் பழனிச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் வழிகாட்டுதலின் படியும் செயல் அலுவலர் முருகனின் ஆலோசனையின் படி கூட்டம் நடைபெற்றது.
திட்டத்தின் விளக்கவுரை திட்ட செயலர் பொன்னழகு வழங்கினார்.
கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்