Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கறிக்கோழி தரத்தை உயர்த்த திருச்சியில் மொத்த வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்.

0

'- Advertisement -

கறிக்கோழி தரத்தை உயர்த்த முடிவு,
மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.

Ad banner

பிராய்லர் கோழிகளின் தரத்தை மேலும் உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது என மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கோழி வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மற்றும் மலைக்கோட்டை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு டெல்டா கோழி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பாரத் ஜீவா, மலைக்கோட்டை கோழி வியாபாரிகள் சங்க தலைவர் ரம்யா கோவிந்தராஜ், ஹனிபா சிக்கன் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோழி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், கடைகளின் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்டா வியாபாரிகள் சங்க தலைவர் துரைராஜ் கூறுகையில்,

TVK ad

பிராய்லர் கோழிகளின் தரத்தை மேலும் உயர்த்துவது குறித்து உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தரமான கோழிகளையும், சுகாதாரமான கோழிகளையும் வழங்க வேண்டும் என நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளோம். கோழி உற்பத்தி நிறுவனங்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே பண்ணையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே உள்ள பிரச்னையையும் தீர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதில், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கோழி வியாபாரிகள், கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.