Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சனிப்பெயர்ச்சி அன்று சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க, சனிப்பெயர்ச்சி நாள் அன்று மட்டும் அல்லாது, அன்றைய தினத்தில் இருந்து, ஒரு மண்டலத்துக்கு, அதாவது 48 நாட்கள் வரை சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது, அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
மேலும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் என்று தரிசனத்திற்கான விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் www.thirunallarutemple.org முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.