Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பரபரப்பான காலையில் எளிதாக தக்காளி உப்புமா செய்வது எப்படி எனப் பார்க்கலாம்

0

 

பரபரப்பான காலையில் எளிதாக மற்றும் சுவையாக தக்காளி உப்மா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – 6-7
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சூடான நீர் – தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி

செய்முறை
வாணலியில் மிதமான தீயில் ரவையை சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.
இதனைத் தனியே வைத்துவிடுங்கள். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் / நெய்யை சூடாக்கவும். அதில் கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் மென்மையாகவும் வரை வதக்கவும். இப்போது, தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகும் மாறும் வரை சமைக்கவும். காய்ந்த மிளகாய், மஞ்சள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு உள்ளிட்ட மசாலா பொருள்களைச் சேர்த்து சுமார் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இந்தக் கலவையில் வறுத்த ரவை மற்றும் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி தொடர்ந்து கலந்து விடவும். சுமார் ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் பிறகு, அடுப்பை அணைத்து, கலவையின் மேல் கொத்தமல்லி இலைகள் தூவி சூடாகப் பரிமாறலாம்.

Leave A Reply

Your email address will not be published.