அங்கன்வாடி பணியாளர்களுக்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சி
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ்,
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை ரோட்டரி சங்கம் திருச்சி சிட்டி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .
கல்லூரி செயலர் அருட் தந்தை பீட்டர் தலைமை வகித்தார். விரிவாக்கத் துறை இயக்குனர் பெர்க்மான்ஸ்,
கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி,
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக பணியாளர் அருணா மன அழுத்தத்தை குறைப்பது பற்றி சிறப்புரையாற்றினார் .
கல்லூரி உளவியல் ஆற்றுப்படுத்தல் துறையின் தலைவர் இம்மானுவேல் ஆரோக்கியம் மன அழுத்தம் குறித்து கருத்துரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மணிகண்டம் ஒன்றியஅலுவலர் கௌசல்யா மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய அலுவலர் கோகிலா மற்றும் திருச்சி சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சபாபதி மற்றும் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். ஜோசப் கிறிஸ்துராஜா நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நெருப்பில்லா இயற்கை உணவு பற்றி ஸ்ரீரங்க ஒன்றிய அலுவலர் ரேவதி செய்து காண்பித்தார். பின்னர் அனைவருக்கும் காய்கறி சாலட் பரிமாறப்பட்டது. அந்தநல்லூர் ஸ்ரீரங்கம் மணப்பாறை திருவரம்பூர் மணிகண்டம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 120 அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.