Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அறிக்கை

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அறிக்கை

0

வாக்காளர் பட்டியல் சிறப்பு
சுருக்கமுறை திருத்த முகாம்
————
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக்
கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
மு.பரஞ்ஜோதி M.A.,B.L., அறிக்கை

https://trichyxpress.com/

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.அண்ணன் எடப்பாடியார் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.மு.பரஞ்ஜோதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை 12.12.2020 (சனிக் கிழமை), மற்றும் நாளை மறுநாள் 13.12.2020 (ஞாயிற்றுக கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
அதுசமயம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டக் கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்டம், வார்டு, கிளை அளவில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களின் துணையுடன் தேவையான படிவங்களைப்பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாமில் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

மு.பரஞ்ஜோதி M.A.,B.L.,
மாவட்டக் கழகச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்.

Leave A Reply

Your email address will not be published.