திருச்சியில் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்.
திருச்சியில் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்.
திருச்சி டவுன் ஸ்டேஷன் அருகில்
சாலை வசதி கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
டவுன் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு
மலைக்கோட்டை, டிச,10-
சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை வசதி கோரி மழைநீரில் நாற்று நடும் போராட்டம் இன்று காலை திருச்சி டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையம் அருகில் கீழ தேவஸ்தானத்தில் சாலை வசதி கோரி பெண்கள் தேங்கிய மழைநீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 8 – வது வார்டு பகுதியான கீழ தேவதானம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து நடப்பதற்கும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்வதற்கு கடினமாக இருந்து வருகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக கடந்த
2 வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் சரிவர மூடப்பட்டதால் குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் உடனடியாக சாலை வசதி ஏற்பாடு செய்து தரக்கோரி பலமுறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் என சாலையில் நாற்று நடல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் கூறிய போது இப்பகுதியில் சாலைகள் மேம்பாட்டிற்காக 60 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கும் எனினும் தற்காலிக ஏற்பாடாக சாலையை சீரமைத்து தரப்படும் என கூறினர். அதிகாரிகள் உறுதி அளித்ததால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.