சாலையில் வசித்தவரை அழைத்து உதவிய மாவட்ட செயலாளர் பரஞ்சோதி
சாலையில் வசித்தவரை அழைத்து உதவிய மாவட்ட செயலாளர் பரஞ்சோதி
திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் தொகுதி,அல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த,தங்கவேல் (வயது 83) கிண்டியில் உள்ள அரசு தொழிற் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ஓய்வு ஊதியத் தொகையை கொண்டு திருமணமாகாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர் ஓய்வூதியத் தொகை வராத காரணத்தால் செலவுக்கு பணம் இன்றி சாலையோரங்களில் வசித்து வந்தார் இதனை அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் .மு.பரஞ்ஜோதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அழகேசனிடம் அவரது வாகனத்தில் தங்கவேலு அவர்களை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கு அழைத்து வரச்சொல்லி உதவித்தொகை ரூபாய் 10,000 வேஷ்டி,சட்டை, போர்வை,ஆகியவற்றை அளித்து உதவினார்.