சீரியல் நடிகை சித்ரா சாவு தற்கொலையா ? கொலையா ? மர்மம் விலகியது .
சீரியல் நடிகை சித்ரா சாவு தற்கொலையா ? கொலையா ? மர்மம் விலகியது .
டிவி நடிகை நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார். போலீசார் தகவல்.
டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு சந்தெகங்களை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த தடவியல் நிபுணர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஹூட்டிங்கை முடித்து கொண்டு தான் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறைக்கு திரும்பிய சித்ரா, நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.
குளிக்க செல்வதாக கூறிவிட்டு போன, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் ஹேமந்த் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து தான் சந்தேகம் எழத் தொடங்கியது. குளிக்கும் போது கணவரை அறையை விட்டு வெளியேற சொல்லியது ஏன்..? உடை மாற்றுவதாக இருந்தாலும் பாத்ரூமில் உடை மாற்றியிருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் ஏன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சித்ராவின் குடும்பத்தினருக்கும் ஹேமந்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சித்ராவின் கன்னத்தில் ரத்தக்காயம் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எப்போதும் அனைவருடனும் சிரித்த முகத்துடன் பழகும் சித்ரா, தற்கொலை செய்யக்கூடிய பெண்ணே இல்லை என்று அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சித்ராவின் கன்னத்தில் உள்ள கீறல்களை ஆய்வு செய்த பிரபல தடவியல் நிபுணர் ஒருவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர், முகத்தில் உள்ள காயங்களை வைத்து பார்த்தால் இது கொலையாக இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு யாராவது ஒருவர் நம்மை தாக்க வரும் போது தான், அதை தடுக்க முற்படும் போது தான் இதுபோன்ற காயங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சித்ராவின் தோழி ரேகா நாயர் பிரபல் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது, சித்ரா திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் நல்ல பையன் இல்லை எனவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் விஷயத்தில் அவர் மோசமானவர் என்றும் தெரிவித்துள்ளார். இதே போல் இன்று காலை பேசிய சித்ராவின் தாயாரும், அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தார். இதுதான் சித்ராவின் தற்கொலைக்கு காரணமா என்ற சந்தேகம் இறந்த நிலையில்
இன்று உடல் பரிசோதனையில் முதல்கட்ட தகவலின்படி டிவி நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என மருத்துவ துறை அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் டிவி நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
இனி டிவி நடிகை சித்ரா தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.