பகல் நேர குடிநீர் வரத்தை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.
திருச்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 46-வது வார்டு, பெரியமிளகு பாறை, கள்ளர் 1,2 மற்றும் 3-வது தெருக்களில் பகல் நேரங்களில் காலை 06.30மணி முதல் 07.30மணி வரை மாநகராட்சி குடிநீர் குழாய்களில் சரிவர குடிநீர் வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் பல மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை என வேதனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட துணைச்செயலாளர் SPS.G.சதீஷ்குமார் தலைமையில் இன்று (07.12.2020) ந் தேதி காலை திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இவ் நிகழ்வில் ம.நீ.ம.கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் M.A.M.ஜெபராஜ், வழக்கறிஞர் S.R.கிஷோர்குமார், 46-வது வார்டு செல்வராஜ், ஈஸ்வரன், சுரேஷ், இளைஞரணி நடராஜ், சிவபாலன் உள்ளிட்ட மய்ய தொண்டர்கள் கலந்து கொண்டனர்.