திருச்சியில் திமுக சார்பில் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி. கே என் நேரு முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சியில் திமுக சார்பில் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி. கே என் நேரு முன்னிலையில் நடைபெற்றது.
*திமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மனு பெரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.*
திமுக கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயி சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன ஓட்டுனர், உரிமையாளர்கள் ,கட்டிட கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்று வரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குமு தலைவரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி N.சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அடங்கிய குழுவினர் பங்கேற்று மனுக்களை பெற்று வருகின்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 150க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்கள் அடங்கிய கடிதங்களை போட்டனர்.. இந்நிகழ்ச்சியில்
தெற்கு மாவட்ட பெறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் ,மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ,ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்