பாரதீய கிராமப்புற தபால் ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய கிராமப்புற தபால் ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பாளர் மற்றும் நிறுவன தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1) வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இறந்த உடனேயே பணி வழங்க வேண்டும்,
2) ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மூன்று மாதத்துக்குள் அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும்,
3) செக்யூரிட்டி பாண்டுக்கு இனி பணம் பிடித்தம் செய்யக் கூடாது, பிடித்த பணத்தை திருப்பித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்,
4) டிபார்ட்மெண்ட் ஊழியர்கள் 8 மணி நேரம் பணி புரிகிறார்கள், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
5) ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையத்தில் பணிபுரியும் உதவி மேற்பார்வையாளர் (ASP) சிவக்குமார் பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இவர் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் இறங்குவோம்,
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.