திருச்சியில் தமுமுக சார்பில் கருத்தரங்கம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பங்கேற்பு.
திருச்சியில் தமுமுக சார்பில் டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் நடந்தது.
திமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில பொருளாளர் சபியுல்லா கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட பொருளாளர் முகமது ராஜா நன்றி கூறினார்.