புதிய குடிநீர் தொட்டி:பூமி பூஜையினை கள்ளிக்குடி சுந்தரம் தொடங்கி வைத்தார்.
புதிய குடிநீர் தொட்டி:பூமி பூஜையினை கள்ளிக்குடி சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இன்று காலை K. கள்ளிக்குடி ஊராட்சி உட்பட்ட 11 வது வார்டில் உள்ள சிவன் கோவில்தெரு M. ஆலம்பட்டி ரோட்டில் உள்ள APK நகர் மற்றும் கொங்கு டவுன் ஆகிய இடங்களில் பொது மக்களுக்காக குடிநீர் தொட்டி அமைவதற்கான பூமி பூஜையினை கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் K.S சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் மதிமுக ஒன்றிய செயலாளர் தங்கவேலு, கள்ளிக்குடி ஊராட்சி கிளார்க் பழனிச்சாமி, முன்னாள் மேக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், 11வது வார்டு உறுப்பினர் சம்பூரணம் சங்கர், 12வது வார்டு உறுப்பினர் கண்ணன், 9வது வார்டு உறுப்பினர் சண்முகம்,10 வது வார்டு உறுப்பினர் வேல்முருகன், ஒப்பந்தகாரர் சிவன் கோவில் ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.