முன்னதாக விடுதலை செய்யக்கோரி சசிகலா சிறைத்துறையினரிடம் மனு .
முன்னதாக விடுதலை செய்யக்கோரி சசிகலா சிறைத்துறையினரிடம் மனு .
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகத்திடம் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் பிப்ரவரியுடன் முடிவுக்கு வருகிறது.
இதனையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாய் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத் துறை நிர்வாகத்திடம், சசிகலாவின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் தெரிவித்தார். இந்நிலையில். சசிகலா டிசம்பர் 3ம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகிறார் என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவியது. ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் நன்னடத்தை நாட்கள் கழிப்பு சம்பந்தமாக சிறை கண்காணிப்பாளர் உள்துறைக்கு இதுவரையில் பரிந்துரை செய்யவில்லை எனத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகத்திடம் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்டனைக்காலம் ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுவிக்க சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் மனுவை சிறைத்துறை நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.