Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புரெவி புயல். தயிழக ஆறுகள், அணைகள் தீவிர கண்காணிப்பு

புரெவி புயல். தயிழக ஆறுகள், அணைகள் தீவிர கண்காணிப்பு

0

‘புரெவி’ புயல் உருவாகிறது. இதனால் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தென் வங்ககடலில் 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று காலை புயலாக வலுப்பெறும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற நாளை மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதித கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

நாளை தென்காசி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

இந்த பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.