கனிமொழி எம்.பி.யின் முன் வீரவேல் வெற்றிவேல் முழக்கத்தால் பரபரப்பு
கனிமொழி எம்.பி.யின் முன் வீரவேல் வெற்றிவேல் முழக்கத்தால் பரபரப்பு
ஈரோட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘வீரவேல் வெற்றிவேல்’ என முழக்கம் எழுப்பப் பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கனிமொழி எம்.பி., ஈரோடு கவுந்தப்பாடியில் நேற்று காலை திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக தொண்டர் ஒருவர் அவருக்கு வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து,
பாஜகவின் வேல் யாத்திரையை நினைவுபடுத்துவது போல், ‘வெற்றிவேல் வீரவேல்’ என அவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு கனிமொழி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது