பேரிடர் மீட்புக் குழு மூலம் குழந்தைகளை மீட்டுதர ஊர்மக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
பேரிடர் மீட்புக் குழு மூலம் குழந்தைகளை மீட்டுதர ஊர்மக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
முசிறி மேலத்தெருவில் வசிக்கும்
அருணாச்சலம் ( லேட்) மகன் ரகுராமானின் குழந்தைகள் 2 பேர் கடந்த 17.11.2020 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததனர்.
அவர்களது உடல்கள் இதுவரை கண்டெடுக்க முடியவில்லை இது குறித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ரகுராமன் அளித்த மனுவில்
எனது இரண்டு குழந்தைகள் R.ரத்தீஸ்குமார் (வயது 12) மற்றும் R.மிதுனேஷ், (வயது 8 ஆற்றில் மூழ்கி காணாமல் போய்விட்டனர்.
இதுபற்றி முசிறி காவல் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்திருந்தோம். இதுபற்றி முசிறி காவல் நிலையத்தார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் குழந்தைகள் கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக தேடுதல் பணி முடங்கிவிட்டது.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக “பேரிடர் மீட்புக்குழுவை” வைத்து காணாமல் போன எனது இரண்டு மகன்களை கண்டுபிடித்து தருமாறு மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.
என குழந்தைகளின் தந்தை ரகுராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.