கோயில்களை மீட்டு கட்டித்தர இந்து திருக்கோயில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
கோயில்களை மீட்டு கட்டித்தர இந்து திருக்கோயில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
இந்து திருக்கோயில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமான ஆயிரக்கணக்கான கோயில்கள் மீட்டு புதுப்பித்துக் கொடுக்க வேண்டும், கிராமங்களில் கோயில் இல்லாத இடங்களில் திருக்கோயில்களை கட்டித்தர அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும், கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில் நிர்வாகத்தை கிராம நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும், திருக்கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட துணை தலைவர் கண்ணன் மாவட்ட செயலாளர் குமார், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர் முருகேசன் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.