திருச்சியில் நடைபெற்ற SC,ST ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கலந்தாய்வு.
திருச்சியில் நடைபெற்ற SC,ST ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கலந்தாய்வு.
மத்திய, மாநில எஸ்சி /எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்பு ஆலோசனை கூட்டம் மாநிலத் நிறுவனத் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசியப்பட்டியல் பழங்குடி மக்கள் கழகத்தை வலுப்படுத்துதல், செயற்குழு மற்றும் பொதுக்குழு அமைத்தல், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள தனித்தனி குழுக்களாக அமைத்தல், மேலும் வரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் தொகுதி, வேட்பாளர் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் பால சந்திரன், மாநில இளைஞரணி தலைவர் சாக்ரடீஸ், மாநில அமைப்பாளர் சண்முகம், திருச்சி மாவட்ட தலைவர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மணி மாறன் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.