திருச்சி மாவட்ட புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
திருச்சி மாவட்ட புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வாக்காளர்களுக்கான முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம், முகவரி மாற்றம் என பல மாற்றங்களுக்கு பிறகு இன்று வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிடபட்டது.
இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய மாவட்ட ஆட்சியர், ‘கடந்த பிப்ரவரி 2020 முதல் அக்டோபர் 2020 வரை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 10,99,977, பெண் வாக்காளர்கள் 11,60,256.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், ஆண் 2974, பெண் 3486, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆண் 21,897, நீக்கப்பட்ட பெண்கள் 21209. திருநங்கைகள் 209, கடந்த அக்டோபர் 2020 வரை திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22,60,439 உள்ளனர்.
மேலும் அடுத்த ஜனவரி 2021-ல் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆம் தேதி வரை வாக்களர்கள் தங்கள் மனுவை வழங்கலாம் என்றும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் மனுக்களை கொடுத்து வாக்காளர்கள் குறையை சரி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.