Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சரக காவல்துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்ச்சி முகாம் நடைபெற்றது.

திருச்சி சரக காவல்துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்ச்சி முகாம் நடைபெற்றது.

0

_*திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் திருச்சி சரக காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்ச்சி முகாம்!!!.*_

இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொ) செந்தில் குமார் அவர்களின் மேற்பார்வையில் சரகத்தில் உள்ள காவல் ஓட்டுநர்கள் வாகனங்கள் ஓட்டும் பொழுது வாகனங்களில் வரும் சத்தத்தை கொண்டே வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை கண்காணிப்பது மற்றும் வாகனங்களின் இயக்கங்களைப் பற்றி திரு. T.பாலகிருஷ்ணன் ( Head Service )
திரு.செந்தில் மகேஷ் ( Asst.Manager ) *_ANAAMALAIS TOYOTA – TRICHY_* அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது

வாகனங்களை ஓட்டும் பொழுது, தன் குடும்பத்தாருக்கும், தன் எதிரில் வரும் குடும்பத்தினருக்கும் எந்தவித ஆபத்தும் இன்றி நன்முறையில் வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்பது பற்றியும்,வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அந்த பழுதை உடனே சரி செய்ய வேண்டும் என்பது பற்றியும்,

வாகனங்களை இயக்கும் பொழுது எந்த வித மன அழுத்தமின்றியும், சில சந்தர்ப்பங்களில் துரித நேரத்தில் செல்ல வேண்டிய நிலைக்கு ஏற்படும் பொழுதும் தனது நிலை மாறாது வானங்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மூலம் கண் பரிசோதனை நடைபெற்றது, இதில் ஜோசப் கண் மருத்துவமனையை சேர்ந்த
Dr.J.Julian Abraham – Administrator, தலைமையில்
Dr.Priyadharshini,
Dr.Sree Amritha Priya,
Mr.Gannaprakask – Camp team,Mr.Satheesh,Mr.Surya,Mr. Jebaraj ஆகியோர் கலந்துகொண்டு, அனைத்து காவல்துறை ஓட்டுநர்களுக்கும் கண் பரிசோதனை செய்து, பார்வைத் திறனை பாதுகாப்பது பற்றியும், மேம்படுத்துவது பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் தனது வாகன ஓட்டுனர் என்னை காக்கும் காவல் தெய்வம் என்று புகழாரம் சூட்டினார்

Leave A Reply

Your email address will not be published.