திருச்சியில் மக்கள் நீதி மையம் சுவர் விளம்பரம் அழிப்பு. அதிமுக – மநீம நிர்வாகிகள் இடையே சலசலப்பு.
திருச்சியில் மக்கள் நீதி மையம் சுவர் விளம்பரம் அழிப்பு. அதிமுக - மநீம நிர்வாகிகள் இடையே சலசலப்பு.
“ஆளும் கட்சி அராஜகம்_மக்கள் நீதி மய்யம் சுவர் விளம்பரங்கள் அழிப்பு”
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் 2021 பிப்ரவரி மாதம் 24ந் தேதி கொண்டாடப்படயிருக்கிறது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான சுவர்கள், மேம்பாலங்கள் முழுவதும் கடந்த 2020-ஆகஸ்ட் மாதமே அதிமுகவினர் சுவர் விளம்பரங்கள் எழுதினர். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பரம் 7ந் தேதியை முன்னிட்டு ம.நீ.ம சார்பில் சுவர் விளம்பரம் திருச்சியில் எழுதப்பட்டது.
ம.நீ.ம சுவர் விளம்பரங்கள் உள்ளூர் ஆளும் கட்சி புறநகர் மாவட்ட பிரமுகருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மேற்படி ம.நீ.ம சுவர் விளம்பரங்களை அகற்ற ஆளும் கட்சி பிரமுகர் பெரும் முயற்சி எடுத்தனர்.
இந்நிலையில் மேற்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் பிறந்தநாளை தொடர்ந்து எழுதிய சுவர் விளம்பரங்களில் மேல் புறத்தில் 2021 பிப்ரவரி மாதம் 21ந் தேதி கட்சியின் நான்காமாண்டு விழாவிற்காக சுவர் விளம்பரங்கள் அக்கட்சியினரால் எழுதப்பட்டு வருகின்றனர். இதில் மேலும் உஷ்ணமான அதிமுகவினர் நேற்று (10.11.2020)ந் தேதி திருச்சி, ஜி கார்னரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் எழுதியுள்ள விளம்பரத்தை அழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (11.11.2020) ந் தேதி அரியமங்கலம் பகுதியில் ம.நீ.ம எழுதிய சுவர் விளம்பரத்தையும் அழிக்க முயற்சித்ததை கேள்விபட்டு நிகழ்விடத்தில் குவிந்த ம.நீ.ம தொண்டர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். மேலும் தொடர்ந்து இது போல் சம்பவம் திருச்சியில் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிமுகவினர் மற்றும் ம.நீ.ம தொண்டர்களிடையே கலவரம் முல வாய்ப்புள்ளதாக உளவுதுறை காவல் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
#ஆண்டாண்டு காலமாக ஒரு கட்சியில் ரிசர்வ் செய்யப்பட்ட சுவரில் மற்ற கட்சியினர் எழுதுவதில்லை என்பதை ஒரு மரபாகவே இதுவரை கட்சிகள் கருதி வந்த நிலையில் அதிமுகவின் இந்த செயல் மற்ற கட்சியினரிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.