Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட உயர்நீதிமன்றம் தடை.

வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட உயர்நீதிமன்றம் தடை.

0

வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக போலீஸ், நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், மருத்துவர் மற்றும் நீதிமன்றம் என ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் பலர் தங்களின் தொழில்களுக்கு சம்மந்தமில்லாத ஸ்டிக்கர்களை வாகனங்களின் ஒட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் கவுரவம் மற்றும் வாகன சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு செய்து வருகிறார்கள்.

இதனை போலீசார் பல முறை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அனுமதி இல்லாமல் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தனது அதிருப்தியை கூறியுள்ளது. வழக்கறிஞர்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று கேள்வி எழும்பியுள்ளது. நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானோர் தப்பிப்பதற்காக வழக்கறிஞர் மற்றும் போலி ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கிறார்கள்.
அதனால் வாகனங்களில் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவது குறித்து டிஜிபி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசு சட்ட பல்கலைக்கழகம் முதல்வர் ஆகியோர் அனைவரும் பதிலளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.