திருச்சியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் குழியை மூட ம.நீ.ம வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
திருச்சியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் குழியை மூட ம.நீ.ம வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
போக்குவரத்து சிக்னல் அருகில் குழி தோண்டி நாட்களாச்சு…! உயிர் பலி வாங்கும் முன் குழி மூடப்படுமா…?
திருச்சி கான்வென்ட் ரோட்டிலிருந்து முத்திரையர் சிலை நோக்கி வந்தால் (D.J.ஆட்டோ மொபைல்ஸ் அருகில்) உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே கழிவு நீர் வெளியேற்றத்தை சரிசெய்ய பல நாட்களுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சியால் வெட்டப்பட்ட மிகப்பெரிய குழி பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. மேற்படி போக்குவரத்து சிக்னல் மிக குறுகிய இரு வழி பாதையை கொண்டது. இதில் இந்த குழியினால் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
#இத்தனைக்கும் எல்லா அதிகாரிகளும், ஆயிரகணக்கான பொதுமக்கள் இந்த பகுதியை கடந்து தான் செல்கிறார்கள். ஆனாலும் தீர்வு இல்லை.
எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த “அபாய குழியை” மூட திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை .