திருச்சி அருகே வாலிபர் குத்திக்கொலை , உறவினர் வெறிச்செயல்
திருச்சி அருகே வாலிபர் குத்திக்கொலை , உறவினர் வெறிச்செயல்
திருச்சி அருகே சொத்து பிரச்சனையால் வாலிபர் குத்திக்கொலை. உறவினர் வெறிச்செயல்.
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் ( வயது 34) இவர் மனைவி பெயர் மகாலட்சுமி. கதிரவன் ஆமூர் அரசுப் பள்ளியில் இதற்காக பணிபுரிந்து வந்தார்.
இதே பகுதியில் உள்ள கதிரவனின் உறவினர் கருணாகரன் – முத்துச்செல்வி மகன் சத்யா என்கிற சண்முகராஜன் (வயது 17).
இரண்டு குடும்பத்திற்கும் ஏற்கனவே சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஆயுத பூஜை அன்று சத்யா கதிரவனுக்கு போன் செய்து தண்ணி அடிக்க அழைத்துள்ளார். இருவரும் ஓரிடத்தில் மது அருந்திய பின் கதிரவன் இருசக்கர வாகனம் ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த சண்முகராஜன் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார், இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கதிரவனின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் பலமுறை வெறிகொண்டு குத்தியுள்ளார்.
அதன்பின் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கதிரவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையாளி சண்முகராஜன் மீது வாத்தலை காவல் நிலையத்தில் சரியான நடவடிக்கை இல்லை என கூறி கதிர்வேலின் மனைவி கதறி அழுதார் .அவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்து உள்ளனர்.
கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறி வருகின்றனர்.