ஒரிஜினல் சாமியார்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை,போலிகளுக்கு செக் –
ஒரிஜினல் சாமியார்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை,போலிகளுக்கு செக் -
திருவண்ணாமலையில் ஒரிஜினல் சாமியார்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில், போலி சாமியார்களை அடையாளம் காணும் வகையில், உண்மையான சாமியார்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை காவல்துறையினரால் வழங்கப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும், தி.மலை கிரிவல பாதையில் சுமார் 3 ஆயிரம் சாமியார்கள் வரை தங்கியுள்ளனர்.
குற்றவாளிகள் சிலரும் சாமியார் வேடத்தில் உலா வருவதாகவும், சாமியார்கள் சிலரை போதை பழக்கத்திற்கு சிலர் உட்படுத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாமியார்கள் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க முடிவு செய்தார்.
அதன்படி கிரிவல பாதையில் தங்கியுள்ள சாமியாரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல் கட்டமாக 2 சாமியார்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து சாமியார்களுக்கும் ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் , ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி ,இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சமூகசேவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.