இன்றைய ராசிப்பலன் – 30.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை அமைதி இருக்கும்.
உறவினர்களால் சுப செலவுகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழி உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாகும். குழந்தைகளால் மன உளைச்சல் இருக்கும். பணவரவு இருக்கும்.அனுபவம் உள்ளவர்களின் அறிவுரை உத்தியோகத்திற்கு வளர்ச்சியைக் கொடுக்கும். பிரச்சனைகள் தீர உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு பெருகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன மகிழ்ச்சி செய்திகள் வீடு வந்து குவியும். வீட்டில் நிம்மதி இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். புதிய கத்துக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்லதையே கொடுக்கும். தொழிலில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு தொழில் தொடங்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்லக்கூடும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் கை கொடுக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆரோக்கிய ரீதியில் சிறு பாதிப்புகள் உண்டாகும்.பகல் 2. 57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது.அதே த்திற்கு பிறகு பிரச்சனைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உழைப்புக்கேற்ப பலன் கிடைப்பதில் தாமதமாகும்.பகல் 2. 57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியில் சுற்றுவதைத் தவிர்த்து விடுங்கள். தொழில் ரீதியில் கவனமாக இருங்கள் அதுவே நல்லது. வெளி பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் விரும்பியதை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். வெளி பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். வீட்டில் பெரியவர்களின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்குஎந்த காரியம் செய்யும்போதும் துணிச்சலோடு செய்தால் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை இருக்கும்.குழந்தைகளுடன் கருத்துவேறுபாடு உண்டாகும்.உத்தியோகத்தில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் பெருமை சேர்க்கும் வகையில் இருப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழிலில் இருந்து எதிர்ப்புகள் நீங்கி வருமானம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சற்று மந்தநிலை இருக்கும். சுப காரியங்களில் தடை தாமதம் உண்டாகும்.இன் பிரச்சனைகளை தவிர்க்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் நினைத்த இடமாற்றம் கிடைக்கும்.