திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ள 100க்கும் பெண்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ள 100க்கும் பெண்கள்.
நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில துணை தலைவர் வெங்கடேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்களுடன் மாலை அணிவிக்க உள்ளனர்.
இந்நிலையில் வருடா வருடம் ஏராளமான பெண்கள் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் இருந்து பால் குடம், முளைப்பாரி மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக நடந்து வருவார்கள்.
இதற்கு இந்த வருடம் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதி வழங்கக் கோரி தற்போது திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளதாக தகவல்