சசிகலா விடுதலை, காகிதம் கர்நாடகாவில், கையெழுத்து டெல்லியில்
சசிகலா விடுதலை, காகிதம் கர்நாடகாவில், கையெழுத்து டெல்லியில்
சசிகலா விடுதலை: காகிதம் கர்நாடகாவில், கையெழுத்து டெல்லியில்!
தமிழக அரசியல் களத்தில் இன்றைய தேதியில் சசிகலாவின் விடுதலை எப்போது என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை குறித்த செய்தி வெளியாகும் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடகா சிறைத்துறை ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்றும், அபராதம் கட்டத் தவறினால் தண்டனைக் காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் நன்னடத்தை விதிப்படி நான்கு ஆண்டு காலத்தில் பரோல் நாள்களை எல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் 120 நாள்கள் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக சசிகலா தரப்பினர் கூறுகின்றனர்.
சசிகலா ஷாப்பிங் சென்றதாக எழும்பிய புகார் காரணமாக 30 நாள்கள் அடிபட்டாலும் எப்படியும் 90 நாள்கள் முன்கூட்டியே அவர் வெளியே வர அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதாவது எந்த நேரமும் விடுதலை அறிவிப்பு வெளியாகும் என அடித்துக் கூறுகின்றனர்.
சசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்? க்ளு கொடுத்த எடப்பாடி!
சசிகலா மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இதனால் அவருக்கு பூரட்டாதி நட்சத்திரம் நிறைந்த இன்று (அக்டோபர் 28) சிறந்த நாளாக இருக்கும் என்று அவரது ஜோதிடர்கள் கணித்தனர். எனவே அவருக்கான அபராதத் தொகையைக் கட்ட சசிகலா தரப்பினர் இன்று பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
அபராதத் தொகைக்கான 10 கோடிக்கு வருமான விவரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் எல்லாம் சரியாக முடிந்தால், சிறைத்துறை ஒன்றிரண்டு நாள்களில் கூட விடுதலை செய்ய வாய்ப்புள்ளது என்பது சசிகலா தரப்பு வாதமாக உள்ளது.
அடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை!
இருப்பினும் டெல்லியில் உள்ளவர்கள் பார்வை பட்டால் மட்டுமே இந்த நடைமுறைகள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் என்றும், அதில் தடங்கல் ஏற்படும் பட்சத்தில் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவே பெங்களூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.