வரும் 30ந் தேதி முதல் செயல்படாது. மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு
வரும் 30ந் தேதி முதல் செயல்படாது. மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு
*நவ.30ஆம் தேதி முதல் இவை வேலை செய்யாது.. மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு !*
இன்றைய நவீன காலக்கட்டத்தில் நாம் நினைப்பத்தை நம் விரல்கள் மூலம் இருப்பிடத்திற்கு கொண்டுவர முடியும். இப்படி ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.
உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது.
இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான பயனர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி மைக்ரோசாப்ட் 365 சேவைகள் எதுவும் அடுத்த வருடம் ஆகஸ்ட் முதல் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11-ல் வேலை செய்யாது.
இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் வெப் செயலி இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11 வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அதன்பின்னர் தான் காண முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.