சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாட்களில் நம்பிக்கையான அறிவிப்பு
சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாட்களில் நம்பிக்கையான அறிவிப்பு
*சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வரும்.. மீண்டும் நம்பிக்கை குரல் !*
தமிழக அரசியல் கட்சிகள் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆனால் இதற்கிடையில் பெரம்பலூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர் வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் வரும் என ஒரு தரப்பினரும், அவருக்கும் அதிமுகவும் சம்மந்தம் இல்லையென அமைச்சர்களில் சிலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாட்களில் நல்ல அறிவிப்பு வரும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மீண்டும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 2017 பிப்ரவரி 14ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் அக்.27ஆம் தேதி வரை அதாவது இன்று வரை தசரா விடுமுறை. இதற்கு பிறகு, சசிகலா விடுதலை தொடர்பாக நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இருந்து தகவல் வந்ததும் அபராதத்தை செலுத்துமாறு சசிகலா கூறியுள்ளார். அபராதம் செலுத்தும் நடைமுறை ஒரு நாளிலும் முடியலாம், ஓரிரு நாளும் ஆகலாம்.
மேலும் சொத்துக் குவிப்பு வழக்குநடைபெற்ற 36-வது சிறப்பு நீதிமன்றத்தின் பணி முடிந்துவிட்டது. தற்போது, அபராதம் செலுத்துவது தொடர்பான உத்தரவை பொறுப்பு நீதிமன்றம்தான் பிறப்பிக்கும். உத்தரவு வந்ததும் அபராதத்தை செலுத்திவிடுவோம். அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறியுள்ளார்.