மது விற்பனையில் மாற்றம் வருமா? காவல் துறையினர் கோரிக்கை
மது விற்பனையில் மாற்றம் வருமா? காவல் துறையினர் கோரிக்கை
*மது விற்பனையில் மாற்றம் வருமா? காவல்துறை கோரிக்கை!*
பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்க முடியாது என்ற அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிடுமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி கேட்டுக் கொண்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தேனி மாவட்ட காவல் துறை சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கத்திற்கு திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமி , தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
அப்போது பேசிய திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி, பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு மது வழங்கமுடியாது என்ற அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி வெங்கடேன் ஆகியோர் பாலியல் வன்முறை குற்றங்களுக்கு எதிரான கருத்துக்களையும், அதற்கான தீர்வுகளையும் கூறினர்.