*குழந்தைகளுக்கு பிடித்தமான பிரெட் சாண்ட்விச்: வீட்டில் எப்படி செய்வது?*
பிரெட் சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே!
பிரெட் எப்போதும் கிடைக்கும்; தேவைக்கு வீட்டில் வங்கியும் வைத்துக் கொள்ளலாம். எனவே என்ன பிரேக்பாஸ்ட் செய்வது என திணறுகிற நேரத்தில் உங்களுக்கு பிரெட் ரெசிபி கை கொடுக்கும். பிரெட் சான்ட்விச் எப்படி செய்வது? எனப் பார்க்கலாம்.
*பிரெட் சான்ட்விச் செய்வது எப்படி?*
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 10
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
கேரட் – 3
பச்சைமிளகாய் – 3 (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
நெய் – தேவைக்கு
பிரெட் சான்ட்விச் செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும் கேரட் துருவல், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும். (இதில் பொடியாக நறுக்கின புதினா, மல்லிதழையும் சேர்க்கலாம்)
ப்ரெட்டின் இரு பக்கமும் நெய் தடவி மசாலா கலவையை பரப்பி வைக்கவும். (இதன் மேல் சீஸ் துருவியும் சேர்க்கலாம்)
மேலே மற்றொரு ப்ரெட்டால் மூடி சாண்ட்விச் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாஸ் வைத்து சாப்பிட சுவையான ப்ரெட் சாண்ட்விச் தயார்.
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு என்றாலும், குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ ஏற்றது இது. செய்து மகிழுங்கள்