மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மதுரை, கரூர், தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் வெங்கட் பிரியா பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் டி. அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிராமப்புற மாறுதல் திட்ட தலைமை நிர்வாக அதிகாரி எஸ். பி கார்த்திகா, தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசின் கூடுதல் தலைமை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.