Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவரின் உறவினர்களிடம் தங்க கவசத்தை OPS ஒப்படைத்தார்

தேவரின் உறவினர்களிடம் தங்க கவசத்தை OPS ஒப்படைத்தார்

0

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்கக் கவசத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பாக தனது தோழி சசிகலாவுடன் பசும்பொன் சென்று ரூ.4 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இது குறித்து 2010ஆம் ஆண்டு, தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அதனை வழங்கினார்.

இந்த தங்கக் கவசம் அப்போது அதிமுக-வின் பொருளாளராக இருந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணாநகரிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது, மதுரையிலிருந்து ஓ. பன்னீர்செல்வம், தேவரின் குடும்ப வாரிசான காந்தி மீனாள் நடராஜன் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அதனை கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி, குருபூஜை விழாக்கள் நடைபெறவுள்ளதால், அந்த விழாவிற்காக தங்கக் கவசத்தை துணை முதலமைசச்ரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குடும்ப வாரிசான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்படைத்தார். அப்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.