திருச்சியில் இரு சக்கர வாகன பாதையில் உள்ள இடையூறுகள் அகற்றப்படுமா ?
திருச்சியில் இரு சக்கர வாகன பாதையில் உள்ள இடையூறுகள் அகற்றப்படுமா ?
திருச்சி மாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
இரு சக்கர வாகனப் பாதையில் உள்ள இடையூறுகளை அகற்ற எதிர்பார்ப்பு.
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனம் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வழியில் இடையூறாக அமைக்கப்பட்டுள்ள நெகிழி தடுப்பு குச்சிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சியில் மாநகரக் காவல்துறை சார்பில், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தலைமை அஞ்சலக சிக்னல் பகுதியிலிருந்து, நீதிமன்றம் அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் ரவுண்டானா எம் ஜி ஆர் சிலை வரையில், பிரத்யேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பகுதியிலும் சுமார் 5 அடி அகலத்துக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்காக பெயிண்ட் மூலம் அடையாம் குறிக்கப்பட்டுள்ளது. இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இடையூறின்றி எளிதாக சென்று வருகின்றனர்.
ஆனால், இதில், இந்த பாதையை அடையாளம் காட்டுவதற்கு பெயிண்ட் அடையாளம் மூலம் காட்டப்பட்டுள்ளதுடன், மேலும் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் நெகிழி (பிளாஸ்டிக் கம்பம் ) குச்சிகளும் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை பிரிக்கும் வகையில் நடப்பட்டுள்ளன. தலைமை அஞ்சலகத்திலிருந்து எம்ஜிஆர் சிலை வரையில் 21 குச்சிகளும், எம் ஜி ஆர் சிலையிலிருந்து தலைமை அஞ்சலகம் வரையில் 11 குச்சிகளும் நடப்பட்டுள்ளன. இந்த நெகிழி குச்சிகளால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சில இடங்கல் பிரத்யேக வழியில் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. உடனே ஒதுங்கவும் முடியா நிலையும் தடுமாற்றத்துடன் கூடிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பி எஸ் என் அலுவலகம் அருகில் கார்கள் பழுது நீக்கும் சில நிறுவனங்கள் அமைந்துள்ளன அங்கு இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியில் பெரும்பாலும் கார்கள் நிற்கின்றன. எனவே அப்பகுதியிலிருந்து ஒத்தக்கடை சிக்னல் வரையில் இருச்கர பிரத்யேக வழியை பயன்படுத்த முடிவதில்லை. அதேபோல கண்டோன்மெண்ட் பகுதியில் மகளிர் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வங்கி அருகிலும், நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள பேக்கரி அருகிலும் இருசக்கர வாகனங்கள் வழியில் பெரும்பாலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குச்சிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், நீதிமன்றத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக செல்லும் வாகனங்கள் (ப்ரீ லெப்ட்) தடையில்லாத வகையில் இடப்புறம் செல்வதால் எதிர் திசையில் வரும் வாகனங்களாலும், நீதிமன்றத்திலிருந்து ஒத்தக்கடை நோக்கிச் செல்லும் வாகனங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்தப் பகுதிகளில் சாலை அகலம் குறைவாகவும் குறுகியதாகவும் இருப்பதாலும் முன்புறம் நெகிழி தடுப்புகளால் செல்ல முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிற்கும்போது, அவர்களுக்கு பின்னால் வரும் கார் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் பின்னால் இருந்து சப்தம் எழுப்புவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை குலைந்து விழும் நிலையும் ஏற்படுகின்றது. எனவே இவற்றை அகற்றியும், இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியில் எந்த வாகனமும் வெட்கப்படாமல் இருக்கவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல வழி செய்யுமாறு இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.