Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு: திருச்சியில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு: திருச்சியில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0

https://trichyxpress.com/

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சியில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லம்ண்டி நடராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்தசமயம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில், பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைசெயலாளர் அருள்ஜோதி,ஜாக்குலின்அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர், நடராஜன்,பகுதி செயலாளர்கள்,ஏர்போர்ட் விஜி,கருமண்டபம் ஞானசேகர்,காந்தி மார்க்கெட், சுரேஷ்குப்தா வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, நத்தர்ஷா, டிபன் கடை கார்த்திகேயன் சிந்தை முத்துக்குமார், மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்ததை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், கழக செயற்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், வி.என்.ஆர்.செல்வம், ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.