

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மறைந்த கே.என் ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக 28 வது வார்டு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அண்ணா நகர் பகுதி செயலாளரும்,
கவுன்சிலருமான தென்னூர் கமால் தொடங்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில் 28 வது வட்ட செயலாளர் அம்ஜத் அஹமத்,வட்ட பிரதிநிதி தென்னூர் ராஜ்குமார், ராஜவேலு,இக்பால் மற்றும் வட்ட பகுதி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இப்போது அமைக்கப்பட்டு இருந்த கே.என்.ராமஜெயத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

