முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் குமார் கடிதம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கடிதம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாநகராட்சி பழைய வார்டு எண். 37ல் உள்ள கொட்டப்பட்டு குளமானது சுமார் 70.ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் சேகரமாகும் நீர் ஆதாரத்தை கொண்டு அதனை சுற்றி உள்ள பாசன பகுதிகள் பயனடைகிறது.
மேலும் இதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது பாசன வாய்க்கால் மூலம் அருகில் உள்ள 120 ஏக்கர் பரப்புள்ள மாவடி குளத்திற்கு சென்றடைந்து அப்பகுதிகள் பாசன வசதியினை பெறுகின்றது.
ஆனால் கடந்த ஆண்டு மழையின் போது இந்த கொட்டப்பட்டு குளத்தின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு மின்மோட்டார்கள் மூலம் இதிலிருந்து தண்ணீர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கொட்டப்பட்டு குளத்தில் இருந்து மாவடி குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையானது முறையாக பராமரிப்பு இல்லாததாலும், மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததாலும் இந்நிலை ஏற்பட்டது.
தற்போது திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதனால் குளத்தின் கரைகள் மேலும் பலவீனமடைந்து உள்ளது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அபாயநிலை ஏற்படாமல் இருக்க குளத்தில் கரையை பலப்படுத்துவதுடன் நீர்வழிபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் கடிதம் எழுதியுள்ளார்.

