திருச்சியில் போலீசுக்கு கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவெறும்பூரில்
கத்தியை காட்டி போலீசுக்கு மிரட்டல்
ரவுடி உட்பட 2 பேருக்கு போலீசார் வலை.
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகாமையில் பார் செயல்பட்டு வருகிறது
இதில் திருவெறும்பூர் செல்வபுரம் காந்திநகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி விஷ்ணு என்கிற வெங்கடேஷ் ( வயது 27), திருச்சி கைலாஷ் நகர் மேற்கு கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்( வயது 35) ஆகிய இருவரும் இரவு வெகு நேரம் அமர்ந்து மது அருந்தினர்.
பின்னர் மதுக்கடையை அடைக்க வேண்டிய நேரத்தை தாண்டியும் அவர்கள் வெளியேறாமல் மது கேட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ்காரர் வீரமணி சம்பவ இடம் விரைந்து சென்றார்.
பின்னர் பார் ஊழியர்களிடம் தகராறு செய்த ரவுடி விஷ்ணு மற்றும் பிரவீன் குமாரை பிடிக்க முயன்றார்.
அப்போது குடிபோதையில் இருந்த ரவுடி விஷ்ணு போலீஸ்காரருக்கு கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். போலீஸ்காரரை மிரட்டுவதை அங்கிருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
பின்னர் அதனை நண்பர்களுக்கு பகிர்ந்தனர்.
இதனால் கத்தி முனையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொடுத்து வீரமணி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ரவுடி விஷ்ணு அவரது நண்பர் பிரவீன் குமார் ஆகிய இருவரும் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

