மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
இந்திய இராணுவத்தில் லடாக்கில் என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் லால்குடி நெய்குப்பை கிராமத்தைச் சார்ந்த ரெமிஜீலியன் அவர்கள், இராணுவ பணியின் பொழுது காலமாகிவிட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவரை இழந்து வாழும் அவர் குடும்பத்தாருக்கு திருச்சி மநீம தெற்கு மாவட்டம் சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமாரும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

