தனியார் மருத்துவமனை கழிவுகளை வாங்கி செல்லும் மாநகராட்சி பணியாளர்கள்.ஆணையர் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் விடுத்துள்ள வேண்டுகோள். –


திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா நகரம் என்ற பெயரில் தெருக்களின் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட கூடாது எனக்கூறி வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் தினம் குப்பைகளை வாங்கி மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றி சென்று குப்பை கிடங்குகளில் கொண்டு சேர்க்கின்றனர்.
இந்த துப்புரவு பணியாளர்கள் இல்லங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தாருங்கள் என வாங்கி செல்கிறார்கள்,அவ்வாறு பிரித்துத் தர தெரியாத பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று துப்புரவு பணியாளர்களுக்கு பணம் தரும் இல்லங்களில் தினமும் குப்பையை வாங்கும் இவர்கள் பணம் தராத இல்லங்களில் சலித்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை வாங்குவதே நடைமுறையாக உள்ளது.
வணிக நிறுவனங்கள்,ஹோட்டல்கள்,விளையாட்டு பொருட்கள் விற்பனையகம் என பல இடத்திலும் உள்ள குப்பைகளை வாங்க மாநகராட்சி அதிகாரிகள் பணம் கட்டி லைசென்ஸ் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் சங்கிலியாண்டபுரம் மணல்வாரி ரோட்டில் மருத்துவமனை வாகனத்தில் இருந்த மருத்துவ கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்க எந்த லைசன்ஸ் எடுக்காத மருத்துவமனைகளில் முறைகேடான முறையில் மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனங்களில் மாற்றி ஏற்றி சென்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குகளில் கொட்டி வருகின்றனர்.
தற்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினந்தோறும் மாநகரம் முழுவதும் என்று ஆய்வுகள் வருகிறார்.
மருத்துவரான திருச்சி மாநகராட்சி ஆணையர் உடனடியாக இதுபோன்ற முறைகேடான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

