Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புத்தூரில் கருடா ஸ்கேன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இன்ஜினியர் கலியபெருமாள், சேது லட்சுமி கலியபெருமாள், தனசேகரன்,மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ராஜேஷ்குமார்,
மகப்பேறு மருத்துவர் புவனேஸ்வரி,
லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

திறப்பு விழா பின்னர் கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது:

அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், எம் ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, கலர் டாப்லர் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் -ன் சிறப்பு அம்சங்கள், 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்துவிடலாம். சப்தம் குறைவாக இருக்கும். 24 மணி நேரமும் இயங்கும். அவசர ஊர்தி வசதி உள்ளது. உடனுக்குடன் ரிப்போர்ட் செய்ய மருத்துவர்கள் குழு உள்ளது. படங்கள் துல்லியமாக, தெள்ளத் தெளிவாக இருக்கும். இங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேன்ல் நரம்பியல் சம்பந்தமான புதிய தொழில்நுட்பம் உள்ளதால் அனைத்து வியாதிகளையும் கண்டறிய முடியும். உதாரணமாக ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை, கால்களை ஆட்டச் சொல்லியும், பேச சொல்லியும், ஸ்கேன் எடுக்கலாம் இதனால் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக சிகிச்சை செய்ய முடியும்.
மூளை பகுதியில் டிபி நோய் ஏற்பட்டால் அதற்கு ஸ்பெக்ட்ரோஸ்கோபி முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து எளிதாக கண்டறியலாம் என்ற நவீன பயன்பாடுகள் உள்ளன.

நவீன எம்ஆர்.ஐ ஸ்கேன் மூலம் தண்டுவட நோய்கள், உடலில் எந்தப் பகுதியில் சதை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், முட்டி பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், வயிற்றில் கணையம், ஈரல், பித்தப்பை, பித்த குழாய் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பு துல்லியமாக அறியலாம்.

பெண்களுக்கு மார்பக கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், கட்டிகளையும் எளிதாக டயக்னோஸ் செய்ய முடியும்.

எம் ஆர்.ஐ ஸ்கேன் ரேடியேஷன் இல்லாத பாதுகாப்பான இயந்திரம் ஆகும். கருடா ஸ்கேனில் ரத்த பரிசோதனைகள், உடல் உறுப்பு முழு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படும். ஸ்கேனில் 12 வருடங்கள் அனுபவம் பெற்ற நாங்கள், நோயாளிகளின் தேர்வு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம்.

சிடி ஸ்கேன் மூலம் வயிற்றுப் பகுதி மற்றும் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம். ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்த பகுதியில் ஏற்பட்டாலும் கண்டறியலாம். அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து, பரிசோதனை செய்து அவர்களை ரிப்போர்ட்டுடன் செல்லுமாறு பார்த்துக் கொள்வார்கள்.

மற்ற மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அழைத்து வர அவசர ஊர்தி வசதியும் 24 மணி நேரம் உள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு Anten atal ஸ்கேன் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் தனியாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டாயம் முன்பதிவு அவசியம்.

இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட எங்கள் சக மருத்துவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இங்கு தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் ஸ்கேன் செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.