திருச்சி பிராட்டியூர் பவர் ஹவுஸ் அருகே உள்ள கால்வாயில் நேற்று ஒருவர் மது போதையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நீதிமன்ற காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் தூத்துக்குடி சாத்தான் குளம் நாகன்னை கிராமத்தை சேர்ந்த மகேந்திர குமார், புங்கனூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
அவர் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி மது போதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
நேற்றும் அதே போல் அவர் குடித்துவிட்டு கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பிராட்டியூர் கிராமத்தை சேர்ந்த மில்டன் சாமுவேல் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.