திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமை உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக உட்கட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர், தேர்தல் ஆணையர் பூபேஷ் குமார் சிறப்புரையாற்றினார் .மாநில மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் வாஞ்சி குமரவேல் , மாவட்ட அவைத்தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுன் மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் பெரியசாமி, சரவணன், மணி தேவி செயற்குழு உறுப்பினர் முல்லை சந்திரசேகர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்பீட்டர், சதீஷ்குமார், பாண்டியன், துரைராஜ், இளைஞரணி செயலாளர் நீலமேகம் மகளிர் அணி துணைச் செயலாளர் சுமதி ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேல்முருகன், சந்திரசேகர், குமார், ஜெயபால், சக்தி பெருமாள்ராஜ், கந்தசாமி, பேரூர் கழக செயலாளர் 8வது வார்டு கவுன்சிலர் ஹக்கிம், .மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் சாகுல் அமீது, தொண்டரணி செயலாளர் வஜ்ரவேல். மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து ஒன்றியம், நகரம், பேரூர் ,பகுதி கழகத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் .

