Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்வேயில் 2.5லட்சம் காலிபணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன்.

0

ரயில்வேயில் காலியாக உள்ள இரண்டரை இலட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டி.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் இரண்டாவது முறையாக அகில இந்திய ரயில்வே தொழிற்சங்கத்தின் தேர்தலில் கண்ணையா இரண்டாவது முறையாக செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில்
தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
வெடி வெடித்து கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு வீரசேகரன் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

அகில இந்திய ரயில்வே தொழிற்சங்க
தேர்தலில்
இரண்டாவது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

தற்போது நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் ரயில்வேயை தனியார் மயமாக்குவது, ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களையும் ரயில் நிலையங்களிலும் தனியாருக்கு தாரை வார்ப்பது எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் சுமார் 2.5 லட்சம் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும், மேலும் ரயில்வேயில் பணிபுரியும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து வடமாநில த்தாரையும் அவர்களது ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்ய மாநாட்டில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.